செய்திகள்மலையகம்

போகாவத்தை-கெலிவத்தை பகுதியில் பார ஊர்திகள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி போக்குவரத்து தடை ?

தலாவாக்கலையில் இருந்து போகாவத்தை கடந்து நாவலபிட்டி செல்கின்ற பிரதான பாதையின் கெலிவத்தை பகுதியில் பார ஊர்திகள் இரண்டு ஒன்றுடன் ஒன்று இன்று காலை 09 மணி அளவில் மோதி போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

காலை 09மணிக்கு இடம்பெற்ற இந்த விபத்து காரணமாக குறித்த பிரதான பாதையில் சிறியரக வாகணங்கள் மட்டுமே பயணிக்க முடிந்திருக்கின்றது ,மாலை 05மணி வரை விபத்துக்குள்ளான பார ஊர்திகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது .

மேலும் பயணிகள் தங்களது பயணத்தை இரண்டு பொது மற்றும் தனியார் வாகணங்களில் செல்லவேண்டி உள்ளதால் அதிக பணம் செலவிடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதோடு, பயணிகள் பல விதத்திலும் அசௌகரியத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.

அருள்செல்வம்

Related Articles

Back to top button