
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகாவத்தை தோட்டத்தில் மலையக கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சினால் நிர்மாணிக்ப்பட்ட 50 தனி வீடுகளும் மவுன்ட்வேனன் தோட்டத்தில் 55 வீடுகளுமாக மொத்தம் 105 வீடுகள் இன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு கையளிக்கபட்டது.
லயன் குடியிருப்புகளிலும் இயற்கை அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட குடும்த்தினருக்கே மேற்படி வீடுகள் வழங்கிவைக்கப்பட்டது,
பசுமை பூமி வேலைதிட்டத்தின் கீழ் வீடு ஒன்றுக்கு 7 பேர்ச்சு காணியில் பாதை, குடிநீர் வசதி, மின்சாரம், மலசலகூட வசதி போன்ற அனைத்து அடிப்படை வசதிகளுடன் ஒரு வீட்டிற்கு 10 இலட்சம் ரூபா செலவில் அமைக்கபட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
மேற்படி வீட்டுத்திட்ட திறப்பு விழாவில் பாராளுன்ற உறுப்பினர் திலகராஜ், முன்னால் மத்திய மாகாணசபை உறுப்பினகளான உதயா, ஸ்ரீதரன்,ராம், சிவகுரு, சிங்பொன்னையா உட்பட பிரதேசசபை உறுப்பினர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.