போடைஸ் தோட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி கரம் நீட்டிய தேயிலை எம் தேசம்

ஹட்டன், போடைஸ், 30 ஏக்கர் தோட்டத்தில் கடந்த 29/12/2018 அன்று ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக
24 தோட்ட தொழிலாளர்களின் வீடுகள் பாதிப்படைந்ததோடு அவர்களின் பெருமளவான உடமைகளும் சேதமடைதிருந்தது.
மேலும் பாதிக்கப்பட்ட 45 சிறார்கள் உள்ளிட்ட 108 பேர் பாடசாலையில் தஞ்சமடைந்த நிலையில் தற்போது
தற்காலிகமாக அமைக்கப்பட்ட கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அரசியல் வாதிகள் உட்பட பல சிவில் அமைப்புகளும் அவர்களுக்கு உதவி வருகின்றனர்.
அந்த வரிசையில் தேயிலை எம் தேசம் என்ற சிவில் அமைப்பு பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ,அங்குள்ள பாடசாலை மாணவர்களுக்கும் அவசியமான பொருட்களை இன்று( 05.01.2019) கையளித்தது.
தேயிலை எம் தேசம் என்ற சிவில் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு குறிகிய காலமாக இருந்தாலும் தொடர்ந்தும் மலையக மக்களுக்கும் பல சேவைகளை விரிவுப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.