போடைஸ் 30 ஏக்கர் தோட்ட மக்களுக்கு விரைவில் தனிவீடுகள்

போடைஸ் 30 ஏக்கர் தோட்ட மக்களுக்கு விரைவில் தனிவீடுகள் அமைத்துக்கொடுக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என நுவரலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்..
கடந்த காலங்களில் மலையகப் பகுதிகளில் இடம்பெற்ற மண்சரிவுஇதீயபாய ஆபத்துக்களில் பாதிப்புற்ற மக்களுக்கு தனிவீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டதுபோல போடைஸ் 30 ஏக்கர் தோட்ட மக்களுக்கும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உள்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக தனிவீடுகள் அமைத்துக்கொடுக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் எம்.திலகராஜ் சூறினார்.
தீயாபயத்தை எதிர்கொண்ட போடைஸ் 30 ஏக்கர் தோட்ட லயன் குடியிருப்பையும் பாதிப்புற்ற மக்களுக்கு நிரமாணிக்கப்படும் தற்காலிக கூடாரங்களையும் பாரவையிட்டதோடு தற்காலிக முகாம்களில் தங்கியிருந்த மக்களையும் சந்தித்திருந்தார்
தீயபாயத்தை எதிர்கொண்டவர்களுக்கான தற்காலிக கூடாரங்கள் இப்போது அமைக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு தேவையான கூரைத் தகடுகள் மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சின் ஏற்பாட்டில் ‘ட்ரஸ்ட்’ நிறுவனத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளன. தொண்டு நிறுவனங்களும் நிவாரண உதவிகளை வழங்கியுள்ளன. தோட்ட நிர்வாகமும் தனது பங்களிப்பினை வழங்கி வருகின்றன.
அவசர உதவிகள் எதுவானபோதும் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிரந்தர தீர்வாக தனிவீடுகளே அவசியமாகின்றன. அதனை நிர்மானிப்பதற்கு தேவையான காணிகளை ஒதுக்கீடு செய்யுமாறு அமைச்சர் பழனி திகாம்பரம் விடுத்த பணிப்புரையின் பேரில் தோட்ட நிர்வாகிகளுடன் மேற்கொண்டுள்ளேன். இந்தவாரத்தில் தேசிய கட்டட ஆய்வுகள் நிறுவன அதிகாரிகள் தோட்டத்திற்கு வருகை தந்து பொருத்தமான காணிகளை அடையாளம் கண்டதும் வீடமைப்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அவ்வாறு அமைக்கப்படவுள்ள வீடுகள் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நன்கொடையாகவே வழங்கப்படவுள்ளன என்றும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் உறுதி அளித்துள்ளார் என்றும் தெரிவித்தார்.