கல்விசெய்திகள்

போட்டிப்பரீட்சைகளுக்கான விண்ணப்பிக்கும் காலம் மேலும் நீடிப்பு

அரசாங்கத்தின் போட்டிப்பரீட்சைகளுக்காக விண்ணப்பிக்கும் காலத்தை மேலும் நீடிப்பதற்கு அரசாங்க சேவை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. போட்டிப்பரீட்சைகளுக்கு விண்ணப்பிப்பதற்காக, மே மாதம் இறுதி வாரம் முதல் ஜூன் முதல் வாரம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் காலத்தை ஜூலை 15 ஆம் திகதி வரை நீடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் 8 போட்டிப்பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் காலமே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது. அரசாங்க சேவை ஆணைக்குழு, இது குறித்து பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதுடன், இந்த போட்டிப்பரீட்சைகள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் பரீட்சைகள் திணைக்களம் அறிவிக்கவுள்ளது.

இதேவேளை, 2020 க.பொ.த உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com