மலையகம்

போதைப்பொருட்களுடன் மூவர் ஹட்டனில் கைது

ஹட்டன் போதை பொருள் ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளபட்ட சுற்றி வளைப்பில் போதைப்பொருட்களுடன் 03 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொட்டகலை மற்றும் குடாகம பகுதியில் 1,210 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 5,010 மில்லி கிராம் கேரளா கஞ்சாவுடனயே மேற்படி 3 சந்தேக நபர்களும் நேற்று மாலை கைது செய்யபட்டுள்ளதாக ஹட்டன் போதை பொருள் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யபட்ட சந்தேக நபர்கள் 20 மற்றும் 30 வயதுடையவர்கள் என தெரியவருகிறது. கைது செய்யப்பட்ட மூவரும் ஹட்டன் நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

Related Articles

76 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button