அரசியல்செய்திகள்

போதைப்பொருளுக்கு அடிமையான 5 இலட்சம் பேருக்கு புனர்வாழ்வு ..?

நாடு முழுவதிலும் போதைப் பொருட்களுக்கு அடிமையாகியுள்ள சுமார் 5 இலட்சம் பேருக்கு புனர்வாழ்வளிப்பதற்கான வேலைத்திட்டம் அம்பாந்தோட்டையில் ஆரம்பிக்கப்படும் என்று பாராளுமன்ற உறப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள் சுமார் 4 ஆயிரம் பேருக்கு வசதிகளைச் செய்வது பாரிய பிரச்சினையாகும் என்றும் அவர் கூறினார். நாடு முழுவதிலும் உள்ள சுமார் 5 இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்குவதே முக்கிய நோக்கமாகும் என்றும் அவர் கூறினார்.

அம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துகொண்ட அதன் தலைவர் நாமல் ராஜபக்ஷ இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அம்பாந்தோட்டை மாவட்ட அலுவலகத்திற்கு கடந்த அரசாங்க காலப்பகுதியில் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஊழியர்களை நிரந்தர சேவையில் அமர்த்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெத ஆராச்சி இதன்போது கோரிக்கை விடுத்தார்.

அம்பாந்தோட்டை மாவட்ட வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதான அலுவலகத்தில் உள்ள ஊழியர்களுக்காக வருடத்தில் 480 மில்லியன் ரூபா சம்பளமாக வழங்கப்படவேண்டியுள்ளது.
வீடுகளை அமைப்பதற்காக வருடம் ஒன்றுக்கு 311 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது பாரிய பிரச்சினையாகும் என்று நாமல் ராஜபக்ஷ இதன் போது சுட்டிக்காட்டினார்.

10 அல்லது 12 ஊழியர்கள் தேவைப்படும் இடத்தில் புதிதாக ஒப்பந்த அடிப்படையில் 2,000 ஊழியர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இது பாரிய பிரச்சினை ஆகும் என்றும் அவர் கூறினார் 2015 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட அம்பாந்தோட்டை கவசீமா சேதனப் பசளை திட்டத்தின் கீழான செயற்பாடுகள் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என்று நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

நன்றி tamil.news.lk

Related Articles

Back to top button
image download