உலகம்

போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புக்களை பயங்கரவாத குழுக்களென அறிவிக்கும் திட்டம் – டிரம்ப்

மெக்ஸிக்கோவின் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புக்களை பயங்கரவாத குழுக்களென  அறிவிக்கும் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி காலந்தாழ்த்தியுள்ளார்.

கடந்த மாதம் அமெரிக்க பிரஜைகள் ஒன்பது பேர் மெக்ஸிக்கோவில் வைத்து, இந்தப் போதைப்பொருள் கடத்தற்காரர்களால் கொல்லப்பட்டதையடுத்து, குறித்த போதைப்பொருள் கடத்தற்காரர்களை சட்டரீதியாக பயங்கரவாதக்குழுக்களென அறிவிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி சூளுரைத்திருந்தார்.

இந்தநிலையில் மெக்ஸிக்கோ ஜனாதிபதி அன்ட்ரெஸ் மனுவல் லோபஸ் ஒப்ரடோரின் கோரிக்கைக்கு அமைய, தமது திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிறுத்தி வைத்துள்ளார்.

இந்த நிலையில் தமது வேண்டுகோளுக்கு செவிசாய்த்து அவரது திட்டத்தை பிற்போட்ட ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக மெக்ஸிக்கோ ஜனாதிபதி  அறிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
image download