உலகம்

போதைப்பொருள் விவகாரம் – சீனர்கள் ஒன்பது பேர் அதிரடி கைது.

அமெரிக்காவிற்கு போதைப்பொருள் கடத்தும் 9 பேர் சீனாவில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க மற்றும் சீன அதிகாரிகள் இணைந்து முன்னெடுத்த விசாரணை நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவிற்குக் கப்பலில் அனுப்பப்படும் அதிசக்தி வாய்ந்த போதைப்பொருளைக் கட்டுப்படுத்த சீனா  உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லையென அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஓகஸ்ட் மாதத்தில் தெரிவித்திருந்தார்.

குறித்த போதைப்பொருளானது ஹெரோயினை விட 50 மடங்கு வீரியம் மிக்கது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்கா சீனா இணைந்து இவ்வாறான நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டமை இதுவே முதன்முறையென சீன நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனிடையே அதிசக்தி மிக்க குறித்த போதைப்பொருள் ஆண்டொன்றிற்கு ஒரு இலட்சம் அமெரிக்கர்களின் உயிரைக் காவு கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button