செய்திகள்

போதைப் பொருட்களுடன் 8 இளைஞர்கள் கைது!

இரத்தினபுரி ஹிதெல்ல பகுதியில் அமைந்துள்ள விடுதியொன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் கலந்துக்கொண்டவர்களில் 8 பேர் சட்டவிரோதமாக போதைபொருளை வைத்திருந்துள்ளனர்.

இவர்கள் சம்பவ இடத்தில் வைத்தே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
19 மற்றும் 27 வயதான இளைஞர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்களிடம் இருந்து ஐஸ், ஹெரோயின் மற்றும் கஞ்சா ஆகிய போதைபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 
கஹவத்த பொலிஸார் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Articles

Back to top button