சமூகம்
போதைப் பொருள் விற்பனை மற்றும் பாவனைக்கு எதிராக போராட்டம்.

போதைப் பொருள் விற்பனை மற்றும் அதன் பாவனையைக் கண்டித்து ஏறாவூர் நகர – புன்னைக்குடா வீதியில் வெள்ளிக்கிழமை 14.12.2018 பொது மக்களின் ஏற்பாட்டில் கண்டன கவன ஈர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப் புறங்களில் அதிகரித்து வரும் போதைப் பொருள் விற்பனை மற்றும் அதன் பாவனைக்கெதிராக கண்டன கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டைத் தாமே முன்வந்து நடாத்தவுள்ளதாக பிரதேச பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்குப் பின்னர் ஏறாவூர் புன்னைக்குடா வீதி ஆதார வைத்தியசாலைக்கு அருகில் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.