மலையகம்

போராட்டத்தில் குதித்த 300ற்கு மேற்பட்ட ஆசிரிய பயிலுநர்கள்

1000ரூபா சம்பள உயர்வை கோரி தொடர் போராட்டங்களில் ஈடுப்பட்டுவரும் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவு வழங்கி கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலை ஆசிரிய பயிலுநர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டம் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் ஆரம்பமான குறித்த போராட்டத்தில், சுமார் 300ற்கு மேற்பட்ட ஆசிரிய பயிலுநர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது, அவர்கள் சம்பள உயர்வை கோரும் வகையான பல வாசகங்கள் எழுதிய சுலோகங்களை ஏந்திய வண்ணம் தங்களது போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

தொழிலாளர்களின் சம்பள உயர்வாக 1000ரூபாவை கோரி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இவர்களின் போராட்டம் வெற்றிப்பெற வேண்டும் என்பதற்காகவும், இவர்களுக்கு நியாயமான சம்பளம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் ஆதரவு தெரிவித்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தோம் என போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com