...
செய்திகள்

போலந்துக்கும் இலங்கைக்கும் இடையேயான நேரடி விமான சேவை இன்று முதல் ஆரம்பம்

போலந்துக்கும் இலங்கைக்கும் இடையே நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி போலந்து தலைநகர் வார்சாவாவில் உள்ள சோபின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதல் விமானம் இன்று காலை 5:35 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இந்த விமானத்தில் 230 பயணிகள் பயணித்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குளிர்காலத்தில் 2022 மார்ச் 31 ஆம் திகதி வரை போலந்து ஏயர்லைன்ஸ் இலங்கைக்கும் போலந்துக்கும் இடையில் சேவைகளை முன்னெடுக்கும்.

குறித்த விமான சேவை செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரத்திற்கு 3 விமான சேவைகளை முன்னெடுக்கும்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen