செய்திகள்

போலி ஆவணங்களை தயாரித்து, 700 வாகனங்களை பதிவு செய்தமை தொடர்பில் விசாரணை…

போலி ஆவணங்களை தயாரித்து, 700 வாகனங்களை பதிவு செய்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவை மேற்கோள் காட்டி பிரபல சிங்கள ஊடகமொன்று இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கான அனைத்து தரவுகளையும் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் வழங்கப்பட்டுள்ளன.

கணிணி கட்டமைப்பில் போலியான தரவுகள் சரியான முறையில் தரவேற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட உத்தியோகஸ்தர்கள் யார் என்பது குறித்து விரைவில் கண்டறிய முடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களை இறக்குமதி செய்து போலி ஆவணங்களூடாக அவற்றை இரண்டாம் தரப்பினருக்கு விற்பனை செய்துள்ளமையும் இதனூடாக அம்பலமாகியுள்ளது.

இதனூடாக தற்போது வாகனங்களை வைத்திருப்போருக்கு அசௌகரியங்கள் ஏற்படக்கூடும் என்பதால், போலி ஆவணங்களூடாக வாகனங்களை பதிவு செய்தவர்கள் யார் என்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button