செய்திகள்

போலி ஆவணம் தயாரித்த மூவர் கைது.

வத்தளை கல்யாணி மாவத்தை பகுதியில் போலி ஆவணங்களை தயாரித்த நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வத்தளை, கனேமுல்ல மற்றும் மருதங்கடவல பகுதிகளை சேர்ந்தவர்களே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரச அதிகாரிகள், காணி பதிவாளர் அலுவலகம், சட்டத்தரணிகள், அதிபர்கள், இலங்கை துறைமுக அதிகார சபை, திருமண பதிவாளர், கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் ஆகியோரின் முத்திரைகளை பயன்படுத்தி, போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த சுற்றிவளைப்பில், போலி ஆணவங்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

Related Articles

Back to top button
image download