செய்திகள்

போலி நாணய தாளுடன் இருவர் கைது – குருணாகலையில் சம்பவம்.

குருணாகலையில் 124 ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து போலி நாணயத்தாள்கள் அச்சிடும் இயந்திரம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு சந்தேகநபர்களும் வர்த்தக நிலையமொன்றில் உணவுப்பொருட்களை கொள்வனவு செய்ய போலி நாயணத்தாள்களை பயன்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், வர்த்தக நிலைய உரிமையாளரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்…

சம்பவம் தொடர்பில் பொலன்னறுவை ஹேவாகம பகுதியை சேர்ந்த 25 மற்றும் 26 வயதான இளைஞர்கள் இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள், குருநாகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button
image download