உலகம்

ப.சிதம்பரம் பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் பிணை மனு மீதான விசாரணையை டெல்லி உயர் நீதிமன்றம் நாளை வரை ஒத்திவைத்துள்ளது.

குறித்த வழக்கில் கடந்த மாதம் 16 ஆம் திகதி கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், தனி நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அமுலாக்கல் பிரிவு வழக்கில் ப.சிதம்பரத்துக்கு பிணை வழங்கக்கோரி அவரது சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அவருக்கு பிணை வழங்க எதிர்ப்பு தெரிவித்து அமுலாக்கல் பிரிவு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

ப.சிதம்பரத்தின் பிணை மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வர இருந்தது.

இந்த நிலையில் தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் மீது நடைபெற்ற பொலிஸாரின் தாக்குதலை கண்டித்து, டெல்லி உயர் நீதிமன்ற சட்டத்தரணிகள் நேற்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொண்டனர்.

இதனால் ப.சிதம்பரத்தின் பிணை மனு மீதான விசாரணையை டெல்லி உயர் நீதிமன்றம் நாளை வரை ஒத்திவைத்துள்ளது.

Related Articles

Back to top button