செய்திகள்

மகனின் உயிரைக் காப்பாற்ற ஏங்கித் தவிக்கும் ஓர் ஏழைத் தாய் ..

மகனின் உயிரைக் காப்பாற்ற ஏங்கித் தவிக்கும் ஓர் ஏழைக் குடும்பத்தின் அவல நிலை.

தங்களால்
இயன்றளவு உதவி செய்யுங்கள்.

கடந்த வருடம் (06/01/2020) ஜனவரி மாதம் ஆறாம் திகதி
பசறை – மடுல்சீமை பிரதான வீதி
ஆறாம் கட்டைப்பகுதியில் ஏற்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான ‘எக்கிரிய’ செல்லும் பேருந்து வண்டி வீதியைவிட்டு விலகி சுமார் நூறு அடி பள்ளத்தில் வீழ்ந்து கோர விபத்துக்குள்ளாகியதில்
08 பேர் சம்பவ இடத்திலே பலியாகிய சோக சம்பவம் பதிவாகியது.

இவ்விபத்தில்
ஐம்பது பேர் வரை படுங்காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வீடு திரும்பியிருக்கின்றனர். இவர்களில் சிலர் அங்கவீனர்களாக இருப்பதோடு தொடர்ச்சியாக இன்னும் பூரண குணமடையாமல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து ஏற்பட்டு ஒரு வருடம் பூரத்தியாகவுள்ள நிலையில் விபத்தில் பாதிப்படைந்த ஒரு சில குடும்பங்களின் பொருளாதார நிலையும் வாழ்வாதாரமும் பாதிப்படைந்து வருவதோடு இவர்களின் துயர்துடைக்க
அரச அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் முன்வர வேண்டுமென இம்மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இவ்வாறு விபத்தில் படுகாயமடைந்து நீர்கொழும்பு தனியார் ஆயுர்வேத வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வரும்
மடுல்சீமை – டூமோ தோட்டத்தைச் சேர்ந்த விஜயராஜா (வயது)
என்ற பாடசாலை மாணவன்.

கடந்த வருடம் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தயாராகிகொண்டிருந்த மாணவன்.
பாடசாலை முடிந்து கற்றல் உபகரணங்கள் வாங்குவதற்காக பசறை நகரிற்கு வருகைதந்து வீடு செல்வதற்காக குறித்த பேருந்தில் பயணித்ம வேளையிலே
விபத்தில் படுகாயமடைந்து இன்றுவரை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவரது தாய் சாதாரண தோட்டத்தொழிலாளி, தந்தை தினக்கூலி தொழிலாளி, தங்கை தரம் (க.பொ.த உயர்தர ) பன்னிரண்டாம் வகுப்பு மாணவி.
தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் விஜயராஜுடன் வைத்தியசாலையில்
உடனிருந்து தந்தையே பராமரித்து வருகின்றார். தாய் மட்டுமே
அன்றாட தோட்ட தொழிலாளியாக வேலை செய்து வருகின்றார்.

தனது மாத வருமானத்தில் மகளின் கல்வி செலவுகளையும், குடும்ப செலவுகளையும் கவனித்துவரும் இவர் மகனின் சிகிச்சை செலவுக்கு பெரிதும் கஷ்டப்படுவதாக கண்ணீர் கரைபுரண்டோட பேசினார்.

தனது மகனின் உயிரைக் காப்பாற்றவும் குடும்ப வறுமையை நீக்கவும் எவராவது முன்வரமாட்டார்களா ?
என ஏங்கும் ஏழைக் குடும்பத்திற்கு முடிந்தால்
தங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய முன்வாருங்கள்.

தொடர்புகொள்ள
– நடராஜா மலர்வேந்தன் – 0766437904

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com