சமூகம்
மகனுடன் ஏற்பட்ட முரண்பாடால் தாயொருவர் எடுத்த முடிவு

கிங் கங்கையில் பாய்ந்து தாயொருவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மகனுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வென்னப்புவு, தும்மலதெனிய பிரதேசத்தில் கிங் ஓய பாலத்தில் இருந்து குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிவிந்துள்ளது.
இதேவேளை, உயிரிழந்தவர் வடக்கு தும்மலதெனிய பிரதேசத்தை சேர்ந்த 47 வயதான தாய் என குறிப்பிடப்படுகின்றது.
மேலும், தற்கொலை செய்து கொண்டவர் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.