உலகம்

மகள்களை பாதுகாக்கச் சொன்ன மோடி அமித் ஷாவின் மகனைதான் பாதுகாக்கிறார் – ராகுல் காட்டம்

’பேட்டி பச்சாவ்’ என்று மகள்களை பாதுகாக்கச் சொன்ன பிரதமர் மோடி அமித் ஷாவின் மகனைதான் பாதுகாக்கிறார் என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த ஆண்டின் இறுதியில் சட்டசபை தேர்தலை சந்திக்கவுள்ள குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி வதோதரா மாவட்டத்தில் உள்ள கர்ஜன் பகுதியில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நாட்டு மக்களின் பணத்தை பாதுகாப்பதாக சொன்ன பிரதமர் மோடியின் கண்முன்னே ஒரு கொள்ளை நடந்திருக்கிறது. ஆனால், நீங்கள் (மோடி) அமைதியாக இருக்கிறீர்கள். இந்த கொள்ளையில் நீங்கள் பாதுகாவலரா? கூட்டாளியா? என்று பதில் அளிக்க வேண்டும்.

அமித் ஷா மகனின் நிறுவனம் ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கப்பட்டது. மோடி ஆட்சிக்குவந்து எழுச்சி பெறு இந்தியா – இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள் ஆகிய திட்டங்களை தொடங்கினார். பிறகு, பண மதிப்பு இழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. வரியை அறிமுகப்படுத்தினார். இது சிறு வணிகர்கள் மற்றும் விவசாயிகளை அழித்து விட்டஹ்டு.

இந்த நெருப்பில் இருந்து அமித் ஷா மகனுக்கு சொந்தமான ஒரு நிறுவனம் தலைதூக்கியது. கடந்த 2014-ம் ஆண்டுவரை அந்த நிறுவனம் ஒன்றுமில்லாமல் இருந்தது. ஆனால், 2014-க்கு பிறகு சில மாதங்களில் அபார வளர்ச்சியடைந்து 80 கோடி ரூபாயாக இருந்த அந்த நிறுவனத்தின் மதிப்பு பண நடமாட்டம் 50 ஆயிரம் கோடியாக உயர்ந்து விட்டது.

இந்த நிறுவனத்துக்கு மத்திய மந்திரி நிதிஷ் கோயல் தலைமையிலான துறை வங்கி கடன்களை அளித்தது. இந்த நிறுவனம் 2016-ம் ஆண்டு மூடப்பட்டது. ஆனால், இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் மவுனம் காத்து வருகிறார். பா.ஜ.க. தலைவர்களும் அமித் ஷா மகனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எனவே, பெண் குழந்தைகளுக்காக ’பேட்டி பச்சாவ், பேட்டி படாவ்’ (மகள்களை காப்பாற்றுங்கள் – மகள்களை படிக்க வையுங்கள்) என்று நீங்கள் அறிவித்த திட்டத்தை ’அமித் ஷா கே பேட்டே கோ பச்சாவ் (அமித் ஷாவின் மகனை காப்பாற்றுங்கள்) என்று மாற்றி விடுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button