நிகழ்வுகள்நுவரெலியாமலையகம்

மகாகவி பாரதியின் பிறந்ததினம் ராகலை உயர் பாடசாலையில் இடம்பெற்றது…

மகாகவி பாரதியின் பிறந்ததினம் ராகலை உயர் பாடசாலை வளாகத்தில் அதிபரின் தலைமையில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பாரதி திருவுருவச்சிலைக்கு விளக்கேற்றி மலர்மாலை அணிவிக்கபட்டு , கலை நிகழ்வுகள் அரங்கேற்றபட்டிருந்தன.

குறித்த நிகழ்வு நேற்றைய (11/12)தினம் இடம்பெற்றது.

இதன்போது பாரதி சிலையை நிர்மாணித்து வழங்கிய கௌரி ஸ்டோர்ஸ் உரிமையாளரும் பாடசாலையின் பழைய மாணவருமான திரு. ஹரிதரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பாடசாலை நூலகத்திற்கு பயன்தரும் நூல்களை அன்பளிப்பு செய்தார். மாணவர்களின் பாதுகாப்பு கருதி பழைய மாணவர் சங்கத்தினால் உடல் வெப்பநிலை அளவிடும் கருவிகளும் (infrared thermometers) அதிபரிடம் கையளிக்கபட்டன. பாரதி பிறந்ததின நினைவாக கனிதரும் மரக்கன்றுகளும் நாட்டப்பட்டன.

Related Articles

Back to top button