ஆன்மீகம்

மகா சிவராத்திரி தினத்தில் சிவன் அருள் கிடைக்க வாழ்த்துகிறேன். ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்

இன்றைய தினம் உலகலாவிய இந்து மக்கள் மகா சிவராத்திரி தினத்தை கொண்டாடுகின்றனர்.ஒரு மனிதன் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்களுக்கு விமோசனம் கிடைக்கும் இந்த உன்னத நாளில் அனைவருக்கும் சிவன் அருள் கிடைக்க வாழ்த்துகிறேன்.

அம்பிகை சிவபெருமானை மாசிமாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியில் வணங்கியதாலேயே அன்றைய நாள் மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது என்பது ஐதிகம்.இன்றைய நாளில் இலங்கை வாழ் இந்துக்கள் அனைவரும் ஆலயங்களுக்கு சென்று இக்காலக்கட்டத்தில் காணப்படும் கொரோனா சட்ட விதிகளை மீறாது இறையருளை பெற்றுய்யுமாறு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய சிவராத்திரி விழாவை சிறப்பாக இந்து ஆலயங்களில் முன்னெடுக்க நாட்டின் பிரதமர் பதிவு செய்யப்பட்ட ஆலயங்களுக்கு நிதியுதவிகள் வழங்கியுள்ளமை வரவேற்க்கத்தக்கது, அவருக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நன்றிகளை தெரிவிக்கிறது.

மேலும் மலையக பிரதேச ஆலயங்களில் விசேட பூசைகளை இன்றைய தினத்தில் முறையாக நடத்த ஆலய நிர்வாகங்களை வேண்டிக்கொள்கிறேன்.இந்த  மகா சிவராத்திரி பூசைகளில் நாடும் நாட்டுமக்களும் நலமுடனும் இடர்களில் இருந்து விலகியும் வாழ சிவன் ஆசி கிடைக்க பிரார்த்தனை செய்வதாகவும் அவரின் வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button