அரசியல்

மகிந்தராஜபக்சவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்?

 

முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

இதற்கு பதில் வழங்கிய சபை முதல் லக்ஸ்மன் கிரியல்ல, மகிந்தராஜபக்சவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக பாதுகாப்பு அமைச்சிற்கு தெரிவித்தால், அது தொடர்பில் பரிசீலனை செய்ய தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தங்களுக்கு மகிந்தராஜபக்வின் உயிரை பாதுகாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது குறிக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, இந்த விடயத்தை வெறும் அறிவுறுத்தல் என்று மாத்திரம் கொள்ளாமல், செயற்பாட்டு ரீதியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கோரினார்.

இதற்கு பதில் வழங்கிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவிற்கு 2015ம் ஆண்டு ஜுன் மாதத்தில், 103 பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கப்பட்டனர்.

அத்துடன் அவர் தங்கியுள்ள இல்லங்களிலும் அதிக அளவான பாதுகாப்பு தரப்பினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதேநேரம் அவரது வாகனத் தொடரணிக்கு விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்குமாக இருந்தால் அவருக்கான பாதுகாப்பினை அதிகப்படுத்துவது தொடர்பில் ஆராய தயாராக இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button