அரசியல்
மகிந்த உட்பட அமைச்சர்களுக்கு இடைக்காலத்தடை

122 உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்ட “கேள்வி விராந்து” மனுவின் விசாரணையின் அடிப்படையில் பிரதமராக பதவி வகித்த மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவை, பிரதி அமைச்சர்களை அவர்கள் வகித்த பதவியில் இருந்து இடைநீக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத்தடையுத்தரவொன்றை இன்று பிறப்பித்துள்ளது.
இதேவேளை , மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 49 அமைச்சரவை அமைச்சர்களையும் எதிர்வரும் 12 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.