செய்திகள்மலையகம்

மக்களிடம் கையளிக்கப்பட்ட 22 வீடுகள் அடங்கிய புதிய கிராமம்

முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் நானுஓயா – எடின்பரோ தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 22 வீடுகள் அடங்கிய புதிய கிராமத்தை தொழிலாளர் தேசிய சங்கத்தின் நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர் நிரோஷன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களால் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது.

மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் குறித்த வீட்டுத்திட்டம் கடந்த 2 வருடத்திற்கு முன்னர் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த வீடுகள் ஒவ்வொன்றும் 7 பேர்ச் காணியில் அமைக்கப்பட்டுள்ளதுடன் குடிநீர் மற்றும் மின்சார வசதிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்றைய தினம் குறித்த புதிய கிராமம் மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. பழனி திகாம்பரம் அமைச்சராக இருந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு வீடமைப்பு திட்டங்கள் இன்னும் மக்களிடம் கையளிக்கப்படாது இருப்பதன் காரணமாக மக்கள் சென்று வசிக்கக்கூடிய வீடமைப்புத் திட்டங்களை அவருடைய பிரதேச முக்கியஸ்தர்கள் திறந்து வைத்து வருகின்றனர்.

2 மாதங்களுக்கு முன்னர் ராகலை இப்பகுதியில் இவ்வாறான வீட்டுத்திட்டம் வலப்பனை பகுதி தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதேச சபை உறுப்பினர் சண்முகா உள்ளிட்ட குழுவினரால் கையளிக்கப்பட்டது. அத்துடன் கடந்த மாதம் புளியாவத்தை பிரதேசத்தில் புதிய வீடமைப்புத் திட்டம் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button