செய்திகள்

மக்களுக்கு விரைவாக தடுப்பூசிகளை பெற்றுதந்தவர்களுக்கு நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ் நன்றி தெரிவிப்பு

கொவிட்-19 கொரோனா தொற்றிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக தடுப்பூசிகள்
வழங்கும் செயற்திட்டம் இன்று (30) நுவரெலியா பிரதேச சபையின்
அதிகாரத்திற்குட்பட்ட நானுஓயா புதிய புறநெகும பல்நோக்கு கட்டிடத் தொகுதியில்
வழங்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் இன்று 2000 தடுப்பூசிகள் நானுஓயா பிரதேசத்தை அண்டிய மக்களுக்கு
வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும் நுவரெலியா பிரதேச சபையின் அதிகாரத்திற்குட்பட்ட பிரதேச மக்களுக்கு
விரைவாக தடுப்பூசிகளை பெற்றுதந்தவர்களுக்கு நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு
யோகராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் அவரின் பதிவில் ‘எமது நுவரெலியா பிரதேச சபையின் அதிகாரத்திற்குட்பட்ட
பிரதேச மக்களுக்கு நன்மையை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் விரைவாக
தடுப்பூசிகளை பெற்றுக்கொடுத்த தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களுக்கும் மற்றும் பாராளுமன்ற
உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் அவர்களுக்கும் இவ் இக்கட்டான சூழ்நிலையிலும்
மற்றும் சீரற்ற கால நிலையிலும் எமது மக்களுக்காக சேவை செய்து கொண்டு இருக்கும்
சுகாதார சேவை உத்தியோகஸ்தர்களுக்கும் , பொது சுகாதார பரிசோதகர்களுக்கும்,
கிராம மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும், நுவரெலியா பிரதேச சபையின்
சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் வெளிக்கள சுகாதார ஊழியர்களுக்கும் நுவரெலியா
பிரதேச சபையின் தவிசாளர் என்ற ரீதியில் எனது மனமார்ந்த நன்றிகளைத்
தெரிவித்துக்கொள்கின்றேன்.’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button