மலையகம்

மக்களை ஏமாற்றும் நோக்கம் எங்களுக்கு கிடையாது சம்பள உயர்வை பெற்றுத்தருவோம் -அமைச்சர் திகாம்பரம்

தொண்டமான் ஒருபோதும் சம்பள உயர்வை பெற்றுத்தர மாட்டார் ; ஆனால் நாங்கள் விடமாட்டோம் ; அமைச்சர் திகாம்பரம் உறுதி……….

மக்களை ஏமாற்றும் நோக்கம் எங்களுக்கு கிடையாது எனவும் பெருபான்மை மக்களை போல் சிறுபான்மை மக்களும் வாழவேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சரருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார் .

மஸ்கொலியா மொக்கா தோட்ட த்தில் 16 வருடகாலமாக புனரமைக்கப்படாத காட்மோரில் இருந்து மஸ்கொலியா டி.சைட் வரையான வீதிக்கான அடிகல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உறையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது,

இம்முறை இடம்பெற்ற மேதினத்திற்கு அனைவரும் ஒன்று கூடி பலத்தினை எங்களுக்கு வழங்கினீர்கள். அதேபோல் எதிர்வரும் ஒக்டம்பர் மாதம் இடம்பெறவிருக்கின்ற தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு நாங்கள் வீட்டில் இருந்துவிடகூடாது .

அமைச்சராக இருக்கின்ற எவரும் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட மாட்டார்கள் நான் அமைச்சராக இருந்து கொண்டு சொல்லுகின்றேன், எதிர்வரும் ஒக்டோம்பர் மாதம் இடம் பெறுகின்ற பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை விடயத்தில் எமது மக்களை கம்பனி காரர்களும் கூட்டு ஒப்பந்தத்தில் கைசாத்திட உள்ளவர்கள் மக்களை ஏமாற்றுவது நிச்சயம். மக்கள் அடுத்த மாதத்தில் இருந்து நியாயமான சம்பளத்தினை தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டுமானால் வீதிக்கி இறங்கி போராட வேண்டும்.

இம்முறை தேயிலையின் விலை அதிகரித்த காணப்படுகிறது. ஆகவே, அனைத்து மக்களும் கட்சி பேதங்கள் இன்றி கம்பனி காரர்களுக்கு எதிராகப் போராட ஆயத்தமாகவேண்டும்.

இன்று நாம் நல்லவிடயங்களை செய்யும் போது அதனை ஏற்றுகொள்ள வேண்டும். நான் மாற்றவர்களை போல் கால்நடை அபிவிருத்தி அமைச்சரோடு பேசி கோழிகுஞ்சுகளை வழங்கி நான் மக்களை ஏமாற்றவில்லை. அமைச்சர் என்ற ரீதியில் லயன் குடியிருப்புக்களை ஒழித்து தனி வீட்டு திட்டத்தினை மேலும், அதிகாரிக்க வேண்டுமென தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button