அரசியல்

மக்கள் தொடர்ந்தும் ஒன்றுபட்டிருக்க வேண்டும் – சம்பந்தன்

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், உரிமைகளை வென்றெடுக்கவும் தீவிரமாகவே செயற்பட்டுவருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உரிமைகளைப் பெற்று சுதந்திரமாகவும் சுய ஆட்சியுடனும் வாழவேண்டியது எமது பிறப்புரிமை எனவும் அதை எவராலும் மறுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் மேற்குறிப்பிட்ட இலக்குகளை அடைவதற்கு தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஒற்றுமையுடன் செயலாற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் ஒற்றுமையின் காரணமாகவே இன்றைக்கு இலங்கையில் ஜனநாயகம் நிலவதாகவும் , நீதிமன்றம் சுயாதினமாக செயற்படுவதாகவும் முன்னாள் எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களின் வாக்குறுதிக்கு அமைய செயற்படுவதாகவும் , உரிமைகளை வென்றெடுப்பதற்காக மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button