செய்திகள்

மக்கள் நாளைய தினம் பின்பற்றவேண்டிய நடைமுறைகள்

சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே நாளைய தினம் பயணக் கட்டுப்பாடு நீக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதற்கமைய,

* அலுவலகங்களில் பணிபுரிவதற்கு குறைந்தளவானோரையே சேவைக்கு அழைக்க வேண்டும்.

* வீடுகளிலிருந்து பணிபுரிவோர் தொடர்ந்தும் அவ்வாறே சேவையில் ஈடுபடுத்த நிறுவன அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* பொதுப் போக்குவரத்தில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமையவே பயணிகள் ஏற்றப்பட வேண்டும்.

* பயணிகள் முகக்கவசம் அணிந்திருத்தல், சமூக இடைவெளியை பேணுதல் கட்டாயமாகும்.

* மாகாணங்களுக்கிடையில் போக்குவரத்து தடை மற்றும் பொது நிகழ்ச்சிகள் மற்றும் கேளிக்கை நிகழ்வுகளுக்கு தொடர்ந்தும் தடை

* சுற்றுலாப் பயணங்கள் மற்றும் யாத்திரை செல்ல தடை

* பொது இடங்களில் ஒன்று கூடலுக்குத் தடை

ஆகிய கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றுதல் வேண்டும் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

Related Articles

Back to top button