...
செய்திகள்

மக்கள் வரிப்பணத்தை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் இ .தொ.கா தவிசாளர்-மக்கள் போராட்டம்

அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளர், மக்களின் வரிப்பணத்தை முறைகேடாக பயன்படுத்துகிறார் எனவும், பஸ் தரிப்பிடம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் வியாபார நோக்கில் கடைகளை அமைக்கின்றார் எனவும் குற்றஞ்சாட்டி, அதற்கு எதிராக தொழிலாளர் தேசிய சங்கத்தின் அக்கரப்பத்தனை பிரதேச சபை உறுப்பினர்களும், பிரதேச மக்களும் இன்று (16.12.2021) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எனினும், இந்த குற்றச்சாட்டை அடியோடு நிராகரித்துள்ள பிரதேச சபையின் தவிசாளர் கதிர்ச்செல்வன், மக்களுக்கான பஸ் தரிப்பிடமே அமைக்கப்படுவதாகவும், எஞ்சிய இடத்திலேயே சட்டப்பூர்வமான அனுமதியுடன் மக்கள் நலன் கருதி கடைகள் நிர்மாணிக்கப்படுகின்றன எனவும் அவர் கூறினார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen