...
செய்திகள்

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி! 5 பெண்கள் கைது

கல்கிசை – இரத்மலானை பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதில் முகாமையாளர் மற்றும் ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.

இதில் 3,000 – 5,000 ரூபாய் வரை பெண்கள் விற்கப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25 வயதிலிருந்து 41 வயதுக்குட்பட்ட வக்வெல்ல, மொரட்டுவ, மடோல்சியம், வக்வெல்ல, பாணந்துறை மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

கைது செய்யப்பட்ட பெண்கள் மற்றும் முகாமையாளர் கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen