செய்திகள்பதுளைமலையகம்

மடுல்சீமை – தவறவிடப்பட்ட 75.000 ரூபாய் பணத்தொகையும், வங்கி அட்டையையும் உரிமையாளரிடம் கொடுத்த இளைஞன் …..

மடுல்சீமை பகுதியில் நேற்றைய தினம் (25/12) இளைஞன் ஒருவர் தன்னுடைய 75000 ரூபா பணத்தொகையோடு வங்கி அட்டை உட்பட முக்கிய ஆவணங்களை தவற விடப்பட்டது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடொன்றை பதிசெய்துள்ளார்.

எனினும் குறித்த பணத்தொகையுடன் அவருடைய ஆவணங்களையும் கண்டெடுத்த இளைஞன் ஒருவர் உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் இன்று பதிவாகியது.

முச்சக்கர வண்டி சாரதியான இராமசாமி ஹரேராம் என்ற இளைஞனின் செயல்பாடே பலரை இப்பொழுது மெய்சிலிர்க்க செய்துள்ளது.

இவ்வாறாக நேர்மையுடன் செயல்படும் மனிதாபிமானமுடைய
முச்சக்கர வண்டி சாரதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். நாங்களும் அவரை வாழ்த்துகின்றோம்,பாராட்டுகின்றோம்.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button