செய்திகள்

மடுல்சீமை- பட்டவத்த பகுதியில் இலங்கை ஆசிரியர் சேவையாளர் சங்கம் முன்னெடுத்த கவனயீர்ப்பு போராட்டம்..

மடுல்சீமை- பட்டவத்த பகுதியில் இலங்கை ஆசிரியர் சேவையாளர் சங்கம் முன்னெடுத்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று இடம்பெற்றது. 
மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டதோடு கொவீட் இடர்காலத்தில் இணைய கல்வியை தொடரமுடியாமல் இப்பகுதி மாணவர்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். 
வலையமைப்பு சமிக்ஞையின்மையால் கற்றல் பாதிப்புக்குள்ளாகியதாக மாணவர்களும் இவர்களது பெற்றோர்களும் தமது ஆதங்கத்தை தெரிவித்தனர். இப்பகுதியில் வலையமைப்பு வசதியை மேம்படுத்தி தருமாறு  கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக உரிய அதிகாரிகள் கவனம் செலுத்துமாறு கோரிக்கை விடுப்பட்டது.
நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button