செய்திகள்

மடூலசீமை பிட்டமாறுவ பொல்வத்தை பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது.

மடூல்சீமை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து ஸ்தானத்திற்கு விரைந்த மடூல்சீமை பொலிஸார் பிட்டமாறுவ பொல்வத்தைப் பகுதியில் வீடொன்றில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றுடன் சுமார் 44 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

பதுளை சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி
மற்றும் மடூல்சீமை பொலிஸ் அதிகாரி ஆகியோரின் ஆலோசனையின் பேரில் உதவி பொலிஸ் அதிகாரி தலைமையிலான குழுவினரே பிட்டமாறுவ பொல்வத்தை பகுதிக்கு விரைந்து துப்பாக்கியை கைப்பற்றியதுடன் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு அவரை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மடூல்சீமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி ராமு தனராஜா

Related Articles

Back to top button