செய்திகள்பதுளைமலையகம்

மடூல்சீமை பகுதியில் கள்ளச்சாராயம் உற்பத்தியில் ஈடுபட்ட மூவர் கைது.

மடூல்சீமை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட விராளிபத்தனைப் பகுதியில் 34,25,19 வயதுடைய மூவர் மடூல்சீமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மடூல்சீமை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மடூல்சீமை விராளிபத்தனைப் பகுதிக்கு விரைந்த மடூல்சீமை பொலிஸார் கள்ளச்சாராயம் உற்பத்தியில் ஈடுபட்ட மூவரை கைது செய்யப்பட்டுள்ளதோடு 375 மில்லி லீட்டர் கசிப்பும் 1000 மில்லி லீட்டர் கோடாவும் எரிவாயு அடுப்பொன்றும் எரிவாயு கலன் ஒன்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்த படும் மேலும் சில உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர்களை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி ராமு தனராஜா

Related Articles

Back to top button