செய்திகள்பதுளைமலையகம்

மடூல்சீமை பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது.

மடூல்சீமை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட விராளிபத்தனை பகுதியில் மதுபான போத்தல்களுடன் நேற்று மாலை 06/23 ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மடூல்சீமை விராளிபத்தனைப் பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை செய்வதாக மடூல்சீமை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து உடன் ஸ்தலத்திற்கு விரைந்த மடூல்சீமை பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்ட போது வியாபாரத்தில் ஈடுபட்டு இருந்த நிலையில் 180 மில்லி லீட்டர் 45 மதுபான போத்தல்களை கைப்பற்றியதுடன் 41 வயதுடைய ஆணொருவரையும் மடூல்சீமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை மடூல்சீமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜா

Related Articles

Back to top button