...
செய்திகள்

மடூல்சீமை-3000 மில்லி லீற்றர் கசிப்பு தன் கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது ..

மடூல்சீமை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டூமோ பகுதியில் 3000 மில்லி லீற்றர் கசிப்பு தன் கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 26 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
  இன்று (01/10) காலை மடூல்சீமை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து டூமோ பகுதிக்கு விரைந்து மறைந்திருந்த மடூல்சீமை பொலிஸார் சந்தேக நபரை   கண்காணித்தனர். இதன்போது வீட்டு மரக்கறி  செய்யும் தோட்டத்தில் மறைத்து வைப்பதற்காக எடுத்து செல்லப்பட்ட 3000 மில்லி லீற்றர் கசிப்புடன்     26 வயதுடைய சந்தேக நபரை   மடூல்சீமை பொலிஸார் கைது செய்துள்ளனர். 
சந்தேக நபர் மீது வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு  தனராஜா

Related Articles

Back to top button


Thubinail image
Screen