...
செய்திகள்

மட்டக்களப்பில் தகனசாலையொன்றை அமைக்குமாறு கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் மின் தகனசாலை ஒன்றை அமைக்குமாறு கோரிக்கை விடுத்து அந்த மாவட்ட போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கலாரஞ்சனி மட்டக்களப்பு மாநகரசபை முதல்வருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.

கொவிட்-19 காரணமான உயிரிழந்தவர்களின் சரீரரங்களை தகனம் செய்ய பொலன்னறுவை மாவட்டத்துக்கு பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் கொண்டு செல்லவேண்டியுள்ளதாக அவர் தமது கடித்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருந்து இதுவரை கொரோனா தொற்றினால் மரணித்த 202  சரீரங்களில்; 27 சரீரங்கள் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய தகனம் செய்யப்பட்டுள்ளன.

இந்த சடலங்களை தகனம் செய்வதற்கு மட்டக்களப்பில் இருந்து 100 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பொலன்னறுவை மாவட்டத்தில் அமைந்துள்ள மின் தகனசாலைக்கு கொண்டு செல்லவேண்டியுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen