காலநிலைசெய்திகள்

மட்டக்களப்பில் தொடர்கிறது பலத்த மழை.

பலத்த மழையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரத்து 700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

76 குடும்பங்களை சேர்ந்த 258 பேர் இரண்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – நாவற்குடா மற்றும் காத்தான்குடி ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் அவர்களுக்கான நிவாரணங்கள் வழங்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளோர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதேவேளை நாவற்குடாவில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமில் 25 குடும்பங்களை சேர்ந்த 65 பேர் தொடர்ந்தும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button