செய்திகள்

மட்டக்களப்பில் 3 மீனவர்கள் கைது

மட்டக்களப்பு கல்குடா கடலில் சட்டவிரோதமாக படகு ஒன்றில் கடல் அட்டை பிடித்துக்கொண்டிருந்த 3 மீனவர்களை நேற்று புதன்கிழமை (11) நள்ளிரவு கைதுசெய்துள்ளதாக வாகரை கடற்படையினர் தெரிவித்தனர்.

.

வாகரை கடற்படை முகாம் கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கடற்படையின் கடலோர பாதுகாப்பு திணைக்கள பிரிவு அதிகாரிகளின் உதவியோடு சம்பவதினமான நேற்று நள்ளிரவு 11.45 மணியளவில் கல்குடா கடலில் வைத்து 3 பேரை கைது செய்ததுடன் படகு மற்றும் 65 கடல் அட்டை ஒக்சிஜன் சிலிண்டர் மற்றும் ஏனைய கடல் தொழில் உபகரணங்கள்  என்பனவற்றை மீட்டுள்ளனர். 

இதில் கைது செய்யப்பட்டவர்கள் கல்குடா பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் எனவும் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு  மட்டக்களப்பு மீன்பிடி திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர். 

Related Articles

Back to top button