காலநிலைசெய்திகள்

மட்டக்களப்பில் 35 ஆயிரம் பேர் நிர்க்கதி – பல கிராமங்களின் தொடர்பு துண்டிப்பு

நாட்டின் பல பாகங்களில் பெய்துவரும் அடைமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதில் வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்க பிரிவுகளில் 10,738 குடும்பங்களைச் சேர்ந்த 35,756 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சுமார் 7 இலட்சத்து 70ஆயிரம் ரூபாய் பெறுமதியான சமைத்த உணவுகள் வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளவர்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் வழங்குவதற்காக 16 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வெள்ளப் பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொள்வதற்காக 16.6 மில்லியன் ரூபாய் நிதியை தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையத்திடம் கோரியுள்ளதாகவும் இந்த நிதி கிடைக்கப் பெற்றதும் மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளான அனைவருக்கும் நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் அரச அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
image download