செய்திகள்

மட்டக்களப்பு- களுதாவளை- அருள்மிகு சுயம்புலிங்கப் பிள்ளையார் திருக்கோயில்..

 
கிழக்கிலங்கைக் கரையினிலே கோயில் கொண்ட பிள்ளையாரே
நாம் கேட்கும் வரமளிக்க தவறாது வந்திடப்பா
மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றும் கொண்ட பெருமானே
ஏற்றமிகு உயர் நிலையை எமக்களிக்க வேண்டுமப்பா
வங்கக் கடலோரம் அமர்ந்தருளும் பிள்ளையாரே
வளம் பொங்கும் நிறைவாழ்வைத் தவறாது தந்திடப்பா
அழகுமிகு சூழலிலே அருள் வழங்கும் பெருமானே
ஆதரித்து, அரவணைத்து உயர் நிலையை எமக்களிக்க வேண்டுமப்பா
மட்டு மாநிலத்தினிலே வீற்றிருக்கும் பிள்ளையாரே
மதிகலங்கா நிலை தந்து வழிநடத்த வேண்டுமப்பா
ஆவணி உத்தரத்திலே தீர்த்தமாடும் பெருமானே
ஆறுதலாய் வாழும் நிலை எமக்களிக்க வேண்டுமப்பா
பழம் பெருமை கொண்ட தமிழ் மண்ணில் குடிகொண்ட பிள்ளையாரே
மனம் இரங்கி இறைஞ்சுகின்றோம் எமைக் காக்க வந்திடப்பா
முத்தமிழை வாழவைக்கும் மூத்தவரே பெருமானே
எத்திக்கும் புகழுடனே வாழ நமக்கருள வேண்டுமப்பா
சதி மோசம் அண்டாமல் எமைக் காக்கும் பிள்ளையாரே
நம் சந்ததியினர் தலைநிமிர்ந்து வாழ வழி வேண்டுமப்பா
பகையொழித்து, உறவு பேணி உயர்ந்திடவே வேண்டுகின்றோம் பெருமானே
உற்ற துணையாயிருந்து எமக்கருள வேண்டுமப்பா
அற்புதங்கள் பல கொண்டு பெருமை பெற்ற பிள்ளையாரே
எப்பொழுதும் எமக்குத் துணையாயிருந்து காவல் செய்ய வேண்டுமப்பா
மகிழ்ச்சியுடன் வளமுடனே நாம் வாழ வேண்டும் பெருமானே
அத்தனையும் நாம் பெற்று அகமகிழ வழியமைப்பாய் களுதாவளைப் பிள்ளையாரப்பா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen