...
செய்திகள்

மட்டக்களப்பு- கிரான் அருள்மிகு  மகாகாளி அம்பாள் திருக்கோயில்

 
மகிழ்வு பொங்க நாம் வாழ வரமளிக்கும் மகாகாளி
அகிலமெல்லாம் காவல் செய்து காத்தருள வந்தமர்ந்தாள்
தகிக்கின்ற குரோத அலை தணித்திடவே  செய்திடுவாள்
மட்டு மாவட்டந்தனிலே கோயில் கொண்ட மகாகாளி
குற்றங்கள் தடுத்து குவலயத்தைக் காக்கின்ற மகாகாளி
வளமிகுந்த தமிழ் மண்ணில் காவல் செய்ய வந்தமர்ந்தாள்
மூண்டு வரும் பகை, கொடுமை முற்றாக நீக்கிடுவாள்
கிரான் வளநிலத்தில் வீற்றிருக்கும் மகாகாளி
கிழக்கிலங்கை நம்மிடத்தில் கோயில் கொண்ட மகாகாளி
கிலியெமக்கு இனியில்லை என்ற உறுதி தரவந்தமர்ந்தாள்
எழுச்சி பெற்று நாம் வாழ அத்தனையும் தந்திடுவாள்
அதர்மத்தை அறுத்தெறிய அவதரிக்கும் மகாகாளி
மண்முனை தமிழரசின் வளநிலத்தில் இருந்தருளும் மகாகாளி
மண்வளம் பெருக்கி வளம் செய்ய வந்தமர்ந்தாள்
தேடிவந்து தொல்லை தரும் தீயவரை அழித்திடுவாள்
திடங்கொண்டு எம் மண்ணில் குடியிருக்கும் மகாகாளி
மீன்பாடும் திருநாட்டில் தேடிவந்து கோயில் கொண்ட மகாகாளி
மீட்சி தந்து ஆட்சி செய்ய இங்கு வந்தமர்ந்தாள் 
குறைகளைவாள், குற்றங்கள் தடுத்திடுவாள்
இந்நாட்டில் நம்மவர்கள் வலிமைபெற அருளிடுவாள் மகாகாளி
நம்பித் தொழுவோர்க்கு நலமளித்துக் காத்தருளும் மகாகாளி
பகைகொண்டு வருவோரை அடக்கிடவே வந்தமர்ந்தாள்
மனவுறுதி தந்திடுவாள், வெற்றியும் தவறாதுதான் தந்திடுவாள்
ஏமாற்றமில்லா பெருவாழ்வை எமக்கருள்வாள் மகாகாளி.
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.
ஜெ.ஜெய்ஷிகன்)
கிழக்கிழங்கையில் புகழ்பெற்ற காளி அம்பாள் ஆலயங்களுள் மட்டக்களப்பு கிரான் அருள்மிகு மஹா காளி அம்பாள்

Related Articles

Back to top button


Thubinail image
Screen