செய்திகள்

மட்டக்களப்பு- கொக்கட்டிச்சோலை-அருள்மிகு தான்தோன்றீஸ்வரம் திருக்கோயில் 

அற்புதங்கள் பலகொண்ட பதியமர்ந்த சிவனே
அனுதினமும் உன்னருளைத் தரவேண்டும் ஐயா
உன்னருளே நிம்மதியை நாமடையும் மருந்து 
அம்மருந்தை எமக்களித்து அரவணைப்பாய் சிவனே
பார்வதியம்மையுடனுறையும் சிவனே
பகையில்லா நிம்மதியைத் தந்தருள வேண்டும் ஐயா
ஆற்றல் கொண்டு எழுச்சியுறவுன் நாமம் மருந்து 
அதைப் பெற்று பயனடைய வழியமைப்பாய் சிவனே
மீன்பாடும் தமிழ்நாட்டில் கோயில் கொண்ட சிவனே
நேர்மைய்டன் வாழும் மனம் நாம் அடைய வேண்டும் ஐயா
ஆணவத்தை அடக்கி நல்லவழி காட்டு
அவ்வழியில் மேன்மையுற துணைவருவாய் சிவனே
புல்லுண்ட நந்தியை முன்கொண்ட சிவனே
பூதலத்தில் தமிழ்மொழி எதிரொலிக்க வேண்டும் ஐயா
புல்லர்களின் கொட்டத்தை அடக்கி வழிகாட்டு
அவ்வழியில் நாம்செல்ல உடன்வருவாய் சிவனே
கொக்கட்டிச்சோலையிலே அமர்ந்தருளும் சிவனே
குறைவில்லா நல்வாழ்வை நாமடைய வேண்டும் ஐயா 
உடனிருந்து அறிவுதந்து வழியை நீ காட்டு
மட்டுமாநிலத்திலுறை தான்தோன்றீஸ்வர சிவனே
தண்மதியை தலையினிலே கொண்டுறையும் சிவனே
தமிழ் மொழியும் இந்நாட்டில் அரசோச்ச வேண்டும் ஐயா 
அதற்கான வழியைநீ வகுத்துக் காட்டு
தடையில்லா எதிர்காலம் தந்தருள்வாய் சிவனே.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button
image download