...
செய்திகள்

மட்டக்களப்பு- கொக்கட்டிச்சோலை- தான்தோன்றீஸ்வரம் திருக்கோயில் 

அருள் மணக்கும் திருவிடத்தில் அறங்காக்க வந்துறையும் சிவனே 
அணைத்தருள்வாய், காத்தருள்வாய், நலங்களையும்தான் தருவாய் 
நம்பியுந்தன் தாள் பணியும் நல்லடியார் உயர்வு பெற 
தயாளனே உன்னருளைத் தந்துவிட வேண்டுமைய்யா 
தானாகத் தோன்றி திருக்கோயில் கொண்டுறையும் சிவனே 
வேதனைகள் களைந்திடுவாய் மகிழ்ச்சியைத்தான் தருவாய்
உளநோய்கள், உடல்நோய்கள் அண்டாத சுகங்கள் பெற
தயாளனே உன்னருளைத் தந்து விட வேண்டுமைய்யா  
கொக்கட்டிச்சோலையிலே நின்றருளும் சிவனே 
நல்லவர்கள் வாழ்வில் நலங்கள் பெருகிவிட ஏற்றவழிதான் தருவாய்
பொல்லாதோர் கொடுமை போக்கி அழித்து விட 
தயாளனே உன்னருளைத் தந்து விட வேண்டுமைய்யா  
மட்டு மாவட்டத்தினிலே எழுந்துறையும் சிவனே 
மானமுடன் நாம் வாழ நல்லருளைத்தான் தருவாய்
தலைதாழா நல்வாழ்வு என்றும் நிலை பெறச் செய்துவிட
தயாளனே உன்னருளைத் தந்து விட வேண்டுமைய்யா  
மண்முனை தமிழரசில் மாண்பு பெற்ற சிவனே 
மாசில்லா நல்லுறவு நாம் அடைய அருள் தருவாய்
இப்புவியில் நிம்மதியாய், உரிமை பெற்று வாழ்ந்துவிட
தயாளனே உன்னருளைத் தந்து விட வேண்டுமைய்யா  
வளங்கொண்ட தமிழர் மண்ணில் வந்தமர்ந்த சிவனே 
நிதானமாய் நேர்வழியில் வாழும் அருள் தருவாய்ஒன்றுபட்டு நாம் வாழ்ந்தால் உயர்வுண்டென்றுணர்த்தி
தயாளனே நம்மவர்க்கு  உன்னருளைத் தந்து விட வேண்டுமைய்யா.
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Sent from my Huawei phone

Related Articles

Back to top button


Thubinail image
Screen