ஆன்மீகம்

மட்டக்களப்பு கொக்கட்டிச் சோலை – அருள்மிகு தான்தோன்றீஸ்வரம் திருக்கோயில்

கிழக்கு மாகாணம் – மட்டக்களப்பு மாவட்டம் – கொக்கட்டிச் சோலை அருள்மிகு தான்தோன்றீஸ்வரம் திருக்கோயில்

அற்புதங்கள் பல கொண்ட பதியமர்ந்த சிவனே
அனுதினமும் உன்னருளைத் தரவேண்டும் ஐயா
உன்னருளே நிம்மதியை நாமடையும் மருந்து
அம்மருந்தை எமக்களித்து அணைத்தருள்வாய் சிவனே

அன்னை உமையவளை அருகு கொண்ட சிவனே
அச்சமில்லா நிம்மதியை அளித்தருள்வாய் ஐயா
ஆற்றல் கொண்டு எழுச்சியுற உன் நாமம் மருந்து
அதைப் பெற்று எழுச்சியுற வழியமைப்பாய் சிவனே

மீன்பாடும் தமிழ் நாட்டில் கோயில் கொண்ட சிவனே
பகையுணர்வு அண்டாத பெருவாழ்வைத் தரவேண்டும் ஐயா
ஆணவத்தை அகற்ற உரிய வழி காட்டு
அவ்வழியில் நாம் செல்ல உறுதி செய்வாய் சிவனே

புல்லுண்ட நந்தியை முன் கொண்ட சிவனே
இப்புவியில் தமிழ் மொழிக்கு உரிமை தர வேண்டும்
புல்லர்களின் கொட்டமதை அடக்க வழி காட்டு
அவ்வழியில் நாம் செல்ல வழிதிறப்பாய் சிவனே

மட்டு மாநிலந்தனிலே வந்தமர்ந்த சிவனே
மதிதழும்பா நிலை நின்று வாழும் நிலைதர வேண்டும் ஐயா
உடனிருந்து அறிவு தந்து வாழும்வழி காட்டு
கொக்கட்டிச் சோலையமர் நீ அருள்வாய் சிவனே

கங்கை யம்மை முடிகொண்டு அருள் பொழியும் சிவனே
காலமெல்லாம் இந்நாட்டில் நாம் ஆளும் நிலை தரவேண்டும் ஐயா
அதற்கான வழியை நீ வகுத்துக் காட்டு
அச்சமில்லா நிம்மதியை அடையச் செய்வாய் சிவனே.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button