...
செய்திகள்

மட்டக்களப்பு- சந்திவெளி அருள்மிகு புதுப்பிள்ளையார் திருக்கோயில்…

வேழ முகங்கொண்டு உலகாளும் பிள்ளையாரே
வேதனைகள் போக்கி நலமளிக்க வந்திடய்யா
பெரு நோய்கள் அண்டாத நிலை தருவாய் பிள்ளையாரே
பெருந் தொற்று தொடராது தடுத்துக் காத்திடுவாய் நாம் வணங்கும் பெருமானே

ஒரு புறம் நெல் வயலும், மறுபுறம் பெருங் கடலும் அருகு கொண்ட பிள்ளையாரே
பெருகி வரும் பெருந் தொற்றை தடுத்து அருளிடய்யா
நிம்மதியும், நற்சுகமும் நிலைக்க வழி தருவாய் பிள்ளையாரே
நலங் காத்து காவல் செய்வாய் நாம் வணங்கும் பெருமானே

வைகாசித் திங்களிலே திருவிழாக் காணும் பிள்ளையாரே
வையகத்தில் நிம்மதியை நிலைக்க வழி தந்திடய்யா
வளங் கொண்ட தமிழ் மண்ணில் நிலை கொண்ட பிள்ளையாரே
வளமான எதிர்காலம் தந்திடுவாய் நாம் வணங்கும் பெருமானே

கிழக்கிலங்கை கோயில் கொண்ட குலம் காக்கும் பிள்ளையாரே
கிட்டிவரும் வேதனைகள் எட்டவே போக்கிடய்யா
குறைவில்லா நலமளித்து வாழவைப்பாய் பிள்ளையாரே
நம்பியுன்னடி பணியும் நம்முடனிருப்பாய் நாம் வணங்கும் பெருமானே

மட்டுமா நிலத்தினிலே சந்திவெளி நல்லூரில் கோயில் கொண்ட பிள்ளையாரே
மாண்புடனே வாழ்வதற்கு உன்னருளே வேண்டுமய்யா
நோயற்ற வாழ்வும், நிம்மதியும் தந்திடுவாய் பிள்ளையாரே
நீயேயுடனிருந்து அணைத் தருள்வாய் நாம் வணங்கும் பெருமானே

தேரேறிப் பவனி வரும் திருமகனே பிள்ளையாரே
வழுவில்லா நலன்களைத் தந்தெம்மைக் காத்திடய்யா
நம்பியுன்னடி பணிந்தோம் நலன் காப்பாய் பிள்ளையாரே
நானிலத்தில் நலன் பெருக்கி அருளிடுவாய் நாம் வணங்கும் பெருமானே.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்.
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen