ஆன்மீகம்

மட்டக்களப்பு- சித்தாண்டி வேலாயுத சுவாமி திருக்கோயில்..

வேலவனே விநாயகனுக்கு இளையோனே
உலகினையே ஆடவைக்கும் சிவனார்மைந்தா
காலவெள்ளம் அள்ளிவரும் வேதனைகள் மறைத்துவிட
நலம்தந்து காத்தருள்வாய் சித்தாண்டி வேலவனே..

நாட்டினிலே நல்லாட்சி நாளும் நிலைத்துவிட
ஆட்டிப் படைக்கின்ற அரக்கநிலை தான்அழிய
போட்டி பொறாமைகள் கூண்டோடு மறைந்துவிட
காட்டிடுவாய் உன்திறனைச் சித்தாண்டி வேலவனே..

எட்டுத்திசை பாலகர்கள் இனிதெம்மைக் காத்துவிட
முட்டவரும் கொடுவினைகள் எட்டியே விலகிவிட
சட்டவிதி முறைகள் சமத்துவத்தை நிறுவிவிட
வாட்டம் நீங்கிவிட வழிதருவாய் சித்தாண்டி வேலவனே..

மருதநிலச் சூழலிலே மயிலேறிவருவோனே
மட்டுமா நிலத்தினிலே குடியிருக்கும் கோமகனே
வேதனைகள் சுமந்துநிற்கும் எங்கள்தமிழ் மக்களையே
விரைந்துவந்து காத்தருள்வாய் சித்தாண்டி வேலவனே..

உன்னப்பன் சிவனெங்கே, அன்னையவள் உமையெங்கே
காக்கும் கடைமைகொண்ட மாமன்தான் எங்குசென்றான்
கூட்டிவந்து காட்டிவிடு, கொடுமைகளை நீக்கிவிடு
பாடியுந்தன் அடிபணிந்தேன் சித்தாண்டி வேலவனே.

ஆக்கம்-த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button