செய்திகள்

மட்டக்களப்பு சியோன் தேவாலய பயங்கரவாத தாக்குதல்-சாட்சியாளர்களுக்கு அழைப்பு..

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் மற்றும் சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற வெடிச்சம்பவங்கள் தொடர்பில் துரிதகதியில் சாட்சியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தாக்குதல் தொடர்பில் விசாரணை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதுடன், இந்த நடவடிக்கையில் 40 பேர் கொண்ட பொலிஸ் குழு ஈடுபட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.எம்.பி.பீ. ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து கொழும்பு மற்றும் நீர்கொழும்பு தேவாலயங்களுக்கும் சாட்சி விசாரணைகளுக்கு தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் தொடர்பில் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மற்றும் பிரதிபொலிஸ் மாஅதிபர்கள் இருவரும் வாக்குமூலம் வழங்கியதாக ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை நாளை மறுதினம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

இதேவேளை ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 47 பேர் தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட 27 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் இருவர் பெண்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

Related Articles

Back to top button
image download