...
செய்திகள்

மட்டக்களப்பு- தேற்றாத்தீவு கொம்புச்சந்தி அருள்மிகு பிள்ளையார் திருக்கோயில்

 
மட்டுமாநிலத்தினிலே இருந்துறையும் பிள்ளையாரே
எட்டுத்திக்கும் உன்பார்வை படவேண்டும் சிவன் மகனே
மட்டில்லா வளமளித்து காத்தருள வேண்டுமப்பா 
தேற்றாத்தீவு கோயில் கொண்ட திருமகனே பிள்ளையாரே
கொம்புச் சந்தியிலே எழுந்தருளும் பிள்ளையாரே
கொடுஞ் சிந்தையில்லாத மனநிலையைத் தரவேண்டும் சிவன் மகனே
பாவநிலையண்டாமல் காத்தருள வேண்டுமப்பா
தேற்றாத்தீவு கோயில் கொண்ட திருமகனே பிள்ளையாரே
கிழக்கிலங்கை இருந்தருளும் பேரருளே பிள்ளையாரே
கிலேசமில்லா எம்மிருப்பை உறுதி செய்ய வேண்டும் சிவன் மகனே
தேடிவரும் கொடுமைகளை ஒழித்திடவே வேண்டுமப்பா
தேற்றாத்தீவு கோயில் கொண்ட திருமகனே பிள்ளையாரே
வனப்புமிகு திருக்கோயில் உடையவரே பிள்ளையாரே
வலிமை கொண்டு வாழ்வதற்கு உறுதி செய்ய வேண்டும் சிவன் மகனே
மகிழ்ச்சியுடன் வாழ்வதற்குன் அருளே வேண்டுமப்பா
தேற்றாத்தீவு கோயில் கொண்ட திருமகனே பிள்ளையாரே
ஆதிசிவன் திருமகனே அறிவுநிறை பிள்ளையாரே
ஆறுதலைத் தந்தெமக்கு ஆசியையும் தரவேண்டும் சிவன் மகனே
எங்கும் நிறைந்துறையும் உன்னருளே வேண்டுமப்பா
தேற்றாத்தீவு கோயில் கொண்ட திருமகனே பிள்ளையாரே
துவண்டு நிற்போர் துயர் போக்கி எழுச்சி தரும் பிள்ளையாரே
துணையிருந்து எமைக் காக்க வரவேண்டும் சிவன் மகனே
தலை நிமிர்ந்த குலத்தினராய் நாம் வாழ வழி வேண்டுமப்பா
தேற்றாத்தீவு கோயில் கொண்ட திருமகனே பிள்ளையாரே.
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen